இலங்கையின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், பங்களாதேஷின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கான பிரகாசமாக வாய்ப்பை கொண்டுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அக்ரம் கான் இந்த நிலைமையை உறுதிப்படுத்தியுள்ளார், அவர்கள் விரைவில் இறுதி முடிவை எடுக்க உள்ளனர்.
பயிற்சியாளராக இருந்த டானியல் வெட்டோரி, தொற்றுநோய் காரணமாக அணியில் சீராக இணைய முடியாததால் பங்களாதேஷ் ஸ்பின் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் பதவி காலியாக இருந்தது.
ரங்கன ஹேரத்துடன், பட்டியலில் இந்தியாவின் சைராஜ் பஹாதுலே மற்றும் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் உள்ளனர் என்று கிரிக்பஸ் தெரிவித்துள்ளது.
ஹேரத் பெயர் பட்டியலில் உள்ள ஒருவர். அவர் நிச்சயமாக இந்த பதவிக்கு முன்னணியில் உள்ளவர். சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு முன்னர் அதை இறுதி செய்ய எங்களால் முடிந்தவரை முயற்சி செய்வோம், ஏனெனில் சிம்பாவே பயணத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துடன் எமக்கு போட்டிகள் உள்ளன“ என அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.