வடமாகாணத்தில் இன்று 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 951பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில்,
கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், கிளிநொச்சி தொற்று நோயியல் வைத்தியசாலையில் ஒருவர் என 8 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், மல்லாவி சுகாதார சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் என 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
மன்னார் மாவட்டத்தல், மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவர், நௌவி தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவர் என 15 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தில், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலை ஒருவர், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 45 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் என 96 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தில், பூவரசங்குளம் வைத்தியசாலையில் 4 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் 2 பேர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை 4 பேர் என 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.