குளக்கட்டினால் வவுனியாவிற்குள் நுழையும் மக்கள்!

Date:

வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக் குளக்கட்டு வீதி வழியாக நகருக்கு பொதுமக்கள் வருகின்றனர்.

வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி செப்பனிடப்பட்டு வருவதால் குறித்த வீதியுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் பூந்தோட்டம், மகாறம்பைக்குளம், காத்தார் சின்னக்குளம், பெரியார்குளம் போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வவுனியா குளக்கட்டு வழியாக நகரை நோக்கி வருகின்றனர்.

நகரில் வியாபார  நிலையங்கள் உட்பட பல்வேறு திணைக்களங்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தேவையற்ற வகையில் அநாவசியமாக பொதுமக்கள் வருகை தருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றது.

நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியில் பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்று செயற்பட்டு வருவருவது போல குளக்கட்டுப் பகுதியிலும் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தி அநாவசியமாக பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...

அம்மாவும் அப்பாவும் படுக்கையில்: பிணை கோரும் நாமல்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்