வடக்கில் மேலும் 92 பேருக்கு தொற்று!

Date:

வடக்கில் மேலும் 92 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தில் 48 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இரவு 178 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டதில் 13 பேருக்கு தொற்று உறுதியானது.

நேற்று 654 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 64 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 190 பேரின் மாதிரிகள் சந்தேகத்திற்கிடமான முடிவை தந்தமையினால் அவற்றை மீள பரிசோதிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டம்‌ 

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில்‌ ஒருவருக்கும்‌, சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில்‌ 2 பேருக்‌கும்‌, பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில்‌ 3 பேருக்கும்‌, யாழ் போதனா மருத்துவமனையில்‌ 6 பேருக்கும்‌, வேலணை சுகாதார மருத்‌துவ அதிகாரி பிரிவில்‌ 3 பேருக்கும்‌, பருத்தித்துறை சுகாதார அதிகாரி பிரிவில்‌ 7 பேருக்கும்‌, யாழ்‌ மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில்‌ 11 பேருக்கும்‌ என 33 பேருக்கு தொற்று
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநாச்சி மாவட்டம்‌

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில்‌ 3 பேருக்கும்‌, கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில்‌ 4.பேருக்கும்‌, கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில்‌ 10 பேருக்கும்‌, தருமபுரம்‌ மற்றும்‌ அக்கராயன்குளம்‌ பிரதேச மருத்துவமனைகளில்‌ தலா 2
பேருக்கும்‌ என 21 பேருக்குத்‌ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம்‌

முல்லைத்தீவுமாவட்டமருத்துவமனையில்‌ 3 பேருக்கும்‌, சிலாவத்தை பிரதேச மருத்துவமனையில்‌ ஒருவருக்‌கும்‌, முல்லைத்தீவு தனிமைப்படுத்தல்‌.மையத்தில்‌ ஒருவருக்கும்‌ என்று 5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்‌தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டம்‌

வவுனியா மாவட்ட மருத்துவமனையில்‌ 3 பேருக்கும்‌, பம்பைமடு தனிமைப்படுத்தல்‌ நிலையத்தில்‌ 14 பேருக்‌கும்‌, செட்டிக்குளம்‌ ஆதார மருத்துவமனையில்‌ ஒருவருக்கும்‌ என்று 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்‌டுள்ளது.

அன்ரிஜனில் அகப்பட்டவர்கள்

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்ரிஜன் சோதனையில் 15 பேருக்கு தொற்று உறுதியானது.

பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் நேற்று 37 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த 4ஆம் திகதி ஓடக்கரையில் நடந்த மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். நேற்று அடையாளம் காணப்பட்டவர்களும், அந்த தொடர்புடையவர்களே. ஏற்கனவே சில தினங்களின் முன் ஓடக்கரை பகுதியில் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது 26 தொற்றாளர்கள் அடையாளம் காண்பட்டனர்.

இதேவேளை, யாழில் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின. கொக்குவில், கோப்பாய் பகுதிகளை சேர்ந்த மூதாட்டிகளே உயிரிழந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் பொலிஸ் நிலையத்தில் விசேட பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை! ​யாழ்....

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்