26.8 C
Jaffna
January 3, 2025
Pagetamil
உலகம்

ஜப்பான், இலங்கை நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்கா அரசு எச்சரிக்கை!

ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அமெரிக்கர்கள் அந்நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 4, 045 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். இலங்கையில் 2,971 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருநாடுகளிலும் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ஜப்பான் செல்ல வேண்டிய தேவை இருக்கும் பட்சத்தில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஜப்பானில் தற்போதைய நிலவும் சூழலில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட உருமாறிய கொரோனாவை பரப்ப வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சில வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் தொற்று பரவல் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கொரோனா பெருந்தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒராண்டு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Update 2 – தென்கொரிய விமான விபத்து

east tamil

தென்கொரியாவில் விமான விபத்து: 28 பேர் பலி

east tamil

Leave a Comment