பளையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்!

Date:

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பளை தம்பகாமம் இன்நாசி குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை (23) மீட்கப்பட்டுள்ளது

சடலமாக மீட்கப்பட்ட பெண் தம்பகாமம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய பொன்னையா வனஜா என்பவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் நேற்றைய தினம் காணாமல் போன நிலையில் உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை குறித்த பெண்ணின் சகோதரரால், பெண்ணின் சடலம் குளத்தில் மிதப்பது கண்டறியப்பட்டதாக பளை பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பளை பொலீசார் மற்றும் இராணுவத்தினர் மக்களின் உதவியுடன் சடலத்தினை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

பெண்ணின் சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் நீதிபதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணைகள் நிறைவடைந்தபின் பிரேத பரிசோதனை மற்றும்
பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பதவுள்ளதாக பளை பொலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்