அமெரிக்க திரையரங்குகள் 14 மாதத்துக்கு பிறகு மீண்டும் திறப்பு!

Date:

அமெரிக்காவிசல் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் சுமார் 14 மாதங்களுக்கு பிறகு,தற்போது திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், 2020ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் பரவத்தொடங்கியது. ஆரம்ப காலத்தில் தொற்று பரவலை டிரம்ப் நிர்வாகம் கண்டுகொள்ளாததால், தொற்றின் தாக்கத்தால் தினசரி ஆயிரக்கணக்கா னார் உயிரிழந்தனர். இதனால், ஹாலிவுட் சினிமா தயாரிப்பு, வெளியீடு, திரையிடல் ஆகியவற்றில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. அதன் காரணமாக சர்வதேச சினிமா வியாபாரம் முடங்கியது. 2020 இல் மார்ச் மாதம் முதல் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்டன.

பின்னர் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றதும், அவர் மேற்கொண்டு வரும் அதிரட நடவடிக்கை காரணமாக, கொரோனா கட்டுக்குள் உள்ளது. 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் முக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் சகஜமான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து, அங்கு திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. அதன் காரணமாக, ஹாலிவுட் தலைநகரமான கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 14 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதை திரைத்துறையினர், ‘மீண்டும் பெரிய திரை’ என்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும், முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்சுநேகர், நடிகர் சாம் ரிச்சர்ட், நடிகை மேத்திக்கியூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் ரிலீஸுக்குத் தயாரான ‘தி ப்ரோடேஜ்’ படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. 14 மாதங்களுக்குப் பின் அகன்ற திரையில் சினிமா பார்த்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்