இயக்கச்சியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

Date:

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை இராணுவ முகாம் அமைந்துள்ள காணியானது 17 பொது மக்களுக்கு சொந்தமானது. எனவே குறித்த காணியினை இராணுவ முகாமுக்கு சுவீகரிக்கும் அரசின் முயற்சியை எதிர்த்து பொது மக்களால் இன்று
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காணியுரிமையாளர்கள் இராணுவம் மற்றும் ஆளும் தரப்புக்கும் எதிராக பல பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்

அதன் தொடர்ச்சியாக பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க, இந்தநில அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நில உரிமையாளர்கள்
தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் என்று கூறி குறித்த நில அளவீட்டு பணியினை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குறித்த மக்கள் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் செ. கஜேந்திரன், மு.சந்திரகுமார், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக
செயற்பாட்டாளர்கள், காணியுரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்