ப்ளு சட்டை மாறனின் ‘ஆண்டி இந்தியன்’ படத்திற்கு மீண்டும் தடை!

Date:

எந்த திரைப்படமாக இருந்தாலும், யார் ஹீரோவாக இருந்தாலும், அதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் துணிச்சலாக விமர்சிப்பவர் ப்ளு சட்டை மாறன்.

திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற மாறன் யூட்யூபில் தமிழ் டாக்கிஸ் எனும் சேனல் வைத்து திரைப்படங்களுக்கு விமர்சனம் கொடுத்து வந்தார்.

ஆண்டி இந்தியன் எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர். ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆண்டி இந்தியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர்.

மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆண்டி இந்தியன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வரும் ரமலான் பண்டிகையை ஒட்டி ரமலான் தினத்தன்று, ப்ளூ சட்டை மாறன் தொடர்ச்சியாக இயங்கிவரும் யூடியுப் தளத்திலேயெ வெளியிட உள்ளதாக அவரே அறிவித்திருக்கிறார்.

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியது. இந்த போஸ்டர் மத நல்லிணக்கத்தையும், அரசியல் நய்யாண்டியையும் கொண்டிருக்கும் படம் எனக் காட்டுகின்றன. மேலும் போஸ்டரில் ஹிந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் என அனைத்து குறியீடுகளும் இருப்பதால் படம் கண்டிப்பாக இந்திய அரசியலைப் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக இந்த போஸ்டரில் ப்ளூ சட்டை மாறன் அவருக்கு அவரே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

ரிவைசிங் கமிட்டி எனச் சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர்.

‘ஆண்டி இந்தியன்’ எனும் பெயரை மாற்றிவிட்டு வேறு பெயர் வைக்க வேண்டும். நடிகர் கபாலி எனும் வசனம் அடிக்கடி வருகிறது. அப்பெயரைக் கொண்ட வசனம் வரும் காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும். கமுக, அகமுக என்று வரும் இரண்டு கட்சிகளின் பெயர்களையும் நீக்க வேண்டும். இப்படத்தில் வரும் தேசியக்கட்சி அரசியல்வாதி கதாபாத்திரம் ஒன்றின் பெயர் ‘ராஜா’ என்று இருக்கிறது. அந்தப் பெயரையும் நீக்க வேண்டும். நாங்கள் தரும் 38 கட்களையும் ஏற்றுக்கொண்டு, படத்தில் அவற்றை எடிட் செய்து மறு தணிக்கைக்கு உட்படுத்தினால், U/A சான்றிதழ் தருகிறோம்” என மறு தணிக்கை குழுவினர் கூறியுள்ளனர்.

மேற்கண்ட மாற்றங்களைப் படத்தில் செய்தால் அது படத்தின் போக்கையே பாதித்துவிடும் எனக் கருதிய ‘ஆண்டி இந்தியன்’ படக்குழுவினர்,

உட்தா பஞ்சாப்’, ‘பத்மாவதி’ போன்ற ஹிந்தி படங்களுக்கு அடுத்து அதிகப்படியான கட்களை வாங்கிய திரைப்படம் ‘ஆன்டி இண்டியன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்