நேற்று பதிவான 36 மரணங்களின் விபரம்: 27 வயது பெண்ணும் உள்ளடக்கம்!

Date:

இலங்கையில் கொவிட்-19 தொற்றிdனால் மேலும் 36 மரணங்கள் பதிவாகியுள்ளதாக நேற்று (19) அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 1,051 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா மரண எண்ணிக்கை இதுவாகும்.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-

ஹொரணை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய பெண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே மாதம் 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் இதயநோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

எம்பிலிப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய பெண் ஒருவர், எம்பிலிப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 19 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர், கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் உயர் குருதியழுத்தத்தால் இதயம் மற்றும் சுவாசத்தொகுதி செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

புசல்லாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 58 வயதுடைய ஆண் ஒருவர், கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய பெண் ஒருவர், மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 62 வயதுடைய பெண் ஒருவர், மே 16 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

வென்னொருவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய ஆண் ஒருவர், நாரம்மல வைத்தியசாலையில் இருந்து தம்பதெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில்; மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்னல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர், தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

இரத்மலானை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 67 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர்குருதியழுத்தம், குருதி நஞ்சானமை மற்றும் இதயநோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இராஜகிரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 54 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 19 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், இருதயநோய் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

வத்தள பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் இருதய நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கலபிட்டமட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய ஆண் ஒருவர், வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துல்கிரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஹங்கம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், கொன்னகஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மே 14 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரபொல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், தொம்பே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 13 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மோசமான சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய பெண் ஒருவர், நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 13 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியர் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவனகல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 71 வயதுடைய பெண் ஒருவர், எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியர் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலிகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 71 வயதுடைய பெண் ஒருவர், கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 13 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஹலியகொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 42 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 13 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிக்கபொத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், தியதலாவ ஆதார வைத்தியசாலையில் இருந்து பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்க மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே மாதம் 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். மோசமடைந்த கொவிட் நிமோனியா நிலைமையால் பல உறுப்புக்கள் செயலிழந்தமை மற்றும் சுவாசக் கோளாறு நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

பேராதனை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 59 வயதுடைய பெண் ஒருவர், மே 16 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெல்லபிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 81 வயதுடைய பெண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் இருந்து இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். மோசமான கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹொரணை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டாரகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 94 வயதுடைய ஆண் ஒருவர், மே 17 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நெஞ்சுத் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், மே 17 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நெஞ்சுத் தொற்று, நீரிழிவு மற்றும் நாட்பட்ட ஈரல் கல நோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராதனை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வற்த நிலையில் மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குன்னேபான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 79 வயதுடைய பெண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் மே 19 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிந்தோட்டை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 31 வயதுடைய ஆண் ஒருவர், மே 17 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இமதூவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தல்பே வடக்கு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்; மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரத்கம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தல்கஸ்வல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 27 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 51 வயதுடைய ஆண் ஒருவர், எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் இருந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயாகல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வஸ்கடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹேனகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 96 வயதுடைய ஆண் ஒருவர், மே 18 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நுரையீரல் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் அருகில் விழுந்த அமெரிக்க ஹெலிகொப்டரில் இருந்த விமானிகள் பாதுகாப்பாக உள்ளனர்

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே விழுந்த அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகொப்டரின் விமானிகள்...

இராணுவ வீரர் கடத்தல் விவகாரத்தில் ஒருவர் கைது!

கிரிந்திவெல, நரங்கஸ்பிட்டியவில் 2018 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர்...

பணமோசடி தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளிற்கு சிறப்பு பெரும்பான்மை தேவை

சில பிரிவுகளுக்கு சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படுவதைத் தவிர, பணமோசடி தடுப்புத் திருத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்