சேனாதிராஜா, சுமந்திரனை பதவி விலக கோரியதா தமிழ் அரசு கட்சி?

Date:

வவுனியா நகரசபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை பதவி விலகி புதியவர்களை நியமிக்க வழிவிடுமாறு தான் கோரியதாக வெளிவந்துள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வவுனியா மாவட்ட தலைவருமான ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களான பரதலிங்கம், இராசலிங்கம், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோரை பதவி விலகுமாறு ப. சத்தியலிங்கம் தெரிவித்ததாக செய்திகள் வந்திருந்த நிலையிலேயே அவர் இதனை மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் நகரசபை உறுப்பிர்களை பதவி விலகுமாறு நான் கோரியதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. உள்ளுராட்சி மன்றங்களில் பல கட்சிகள் தமது உறுப்பினர்களை மாற்றம் செய்து வருகின்றது.

அந்தவகையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களான ப. சத்தியநாதன் மற்றும் மங்களநாதன் ஆகியோர் சில மாதங்களுக்கு முன்னர் பதவி விலகி புதியவர்களுக்கு வழிவிட்டிருந்தனர்.

இவ்வாறான முடிவு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானமே. அந்தவகையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்சி ரீதியில் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றினை தற்போது என்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டுளளமை தவறானது என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்