தடுப்பூசி போட்டது போன்று நடித்தாரா? ; சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!

Date:

கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பெட், ஆக்சிஜன் சிலிண்டர், ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.

இந்நிலையில் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். திரையுலக பிரபலங்கள் தடுப்பூசி போடும் போது புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். தங்களை போன்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ரசிகர்களை கேட்டுக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் நயன்தாராவும், அவரின் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்னையில் இருக்கும் குமரன் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அதில் நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்தவர்களோ, நர்ஸ் கையில் ஊசியே இல்லை. ஊசி இல்லாமல் சும்மா புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் மட்டும் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார். தடுப்பூசியிலும் விளம்பரமா என்று கேள்வி எழுப்பினார்கள்.

நயன்தாரா நிஜமாகவே தடுப்பூசி போட்டுக் கொண்டார். நர்ஸ் தன் விரல்களால் ஊசியை மறைத்துவிட்டதால் அது புகைப்படத்தில் தெரியவில்லை என்று நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதை ரசிகர்கள் நம்ப தயாராக இல்லை.

ஒரு தடுப்பூசி போடப் போய் இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ளார் நயன்தாரா. கெரியரை பொறுத்தை வரை சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியுடன் சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா.

நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவகாரம்!நெட்டிசன்களுக்கு கொடுத்த பதிலடி:  அதிகாரப்பூர்வ விளக்கம் - லங்காசிறி நியூஸ்
மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவிருக்கிறார். முக்கோண காதல் கதை கொண்ட அந்த படத்தின் இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். விக்னேஷ் சிவனுக்கு ராசியான விஜய் சேதுபதி தான் ஹீரோ.

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டு நடிகைகளை வைத்து படம் எடுத்து வருகிறார் விக்னேஷ் சிவன். கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்