24.9 C
Jaffna
December 17, 2024
Pagetamil
சினிமா முக்கியச் செய்திகள்

family man 2 trailer: விடுதலைப் புலிகளின் தற்கொலை போராளியாக நடித்துள்ள சமந்தா: ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபடுத்தி சர்ச்சை!

பேமிலி மேன் 2 சீரிஸில் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் தவறாக சித்தரித்துள்ளதாக கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் இந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியான வெப்சீரிஸ் பேமிலிமேன்.

மும்பை குண்டு வெடிப்பை மையமாக கொண்ட உருவாக்கப்பட்ட வெப் சிரிஸில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில், இதன் இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

நடிகை பிரியாமணி இந்த வெப்சீரிஸில் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சாதாரண குடும்பத் தலைவராக இருந்துக் கொண்டே இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதிகளை ஸ்ரீகாந்த் திவாரி எப்படி சமாளிக்கிறார் என்பதை மையமாக வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் வில்லியாக நடித்துள்ளார் நடிகை சமந்தா. ராஜி எனும் தற்கொலைப் படையை சேர்ந்த நபராக நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சீரிஸின் டிரைலர் நேற்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலரில் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் தவறாக காட்டியுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனை தொடர்ந்து பேமிலி மேன் சீரிஸிற்கு எதிராக ட்விட்டரில் ஹேஸ்டாக்குகள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கும் விடுதலைப்புலிகளிற்கும் தொடர்பு இருப்பதை போல் காட்சிப்படுத்தப்பட்டு தொடரை உருவாக்கியுள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த தொடரை ஒளிப்பரப்புவதை அமேசான் நிறுவனம் கைவிட வேண்டும் என்றும் ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பாக பாஜாகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி பகிர்ந்த கருத்து ஒன்றை மையமாக வைத்தே இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதில் நடிகை சமந்தா விடுதலைப் புலிகளை சேர்ந்தவராக நடித்திருப்பதற்கும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. டிரைலர் வெளியான முதல் நாளே கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளதால், இந்த தொடருக்கு மேலும் பல எதிர்ப்பு குரல்கள் எழும் என்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5

இதையும் படியுங்கள்

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு : இந்தியா – இலங்கை கூட்டறிக்கை

Pagetamil

நரேந்திர மோடி- அனுர சந்திப்பு!

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

Leave a Comment