வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் மூன்று பேர்
அண்மையில் கொரோனா தொற்றாளர்களாக
இனங்கானப்பட்டுள்ளனர். இதனால் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது பரவலடையும் சந்தர்பத்தில் பாரிய கொத்தணியாக உருவாகுவதற்கு அதிகமான வாய்ப்புக்களை ஏற்ப்படுத்தியுள்ளது.
வவுனியாமாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட இளைஞர் யுவதிகள் தனியார் ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே தொற்று பரவலடையும் போது அவர்களது குடும்பங்களும் அது பாதிப்பினை ஏற்ப்படுத்தும்.
எனவே மாவட்ட நிர்வாகமும் சுகாதார பிரிவினரும் இந்தவிடயம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி ஆடைத்தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று பலரும்கோரிக்கை விடுக்கின்றனர்