மைனா படத்திற்குள் அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டது பற்றி மனம் திறந்து பேசிய இயக்குநர்!

Date:

மைனா படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் குறித்து, பிறகு அமலா பால் அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது பற்றியும் இயக்குநர் பிரபுசாலமன் மனம் திறந்து பேசியுள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்த படம் ‘மைனா’. இந்த படத்தில் நடித்ததற்காக தம்பி ராமைய்யாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

வசூல் ரீதியாகவும் விமர்சனர்கள் வட்டத்திலும் பெரிய பாராட்டுக்களை பெற்ற இந்த படம் கதாநாயகி அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் ‘மைனா’ படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது அமலா பால் இல்லை என்கிற விபரம் தற்போது தெரியவந்துள்ளது.

முதலில் அந்த படத்தில் நடிக்க இருந்தது அனன்யா. அப்போது நாடோடிகள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சமயம். அதனால் தலைகணத்தில் இருந்த அனன்யா பிரபுசாலமன் ‘மைனா’ படத்தின் கதையை சொன்னபோது கண்டுகொள்ளவில்லையாம்.

சமீபத்தில் இதுதொடர்பாக ஒரு நேர்காணலில் பிரபுசாலமன் குறிப்பிட்டு பேசியுள்ளார். அனன்யாவின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த அவர், மேக்க-அப் இல்லாமல் இருந்த அமலா பாலை பார்த்தவுடன் அவரை படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அமலா பால் முன்னனி நடிகையாக உயர்ந்தார்

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்