உயிரிழந்தவர்களிற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வு!

Date:

வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் கோவில் நிர்வாகத்தினரின் ஏற்ப்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த தமிழ்  மக்களிற்கான ஆத்மசாந்திப்பிரார்த்தனை நிகழ்வு குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று இடம்பெற்றது.
அந்தணர் ஒன்றியத்தின் செயலாளரும் ஆலயத்தின் பிரதம குருவுமான பிரபாகரக்குருக்களினால் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் உயிரிழந்த ஆத்மாக்களின் நினைவாக நெய் விளக்குகள் ஏற்றப்பட்டது.

இவ் வழிபாடுகளில் சமூக ஆர்வலர்கள், உறவுகளை இழந்தவர்கள் என குறிப்பிட்ட அளவிலானோர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை  பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றபோது ஆலயத்தின் வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் பூஜை நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தவர்களின் அடையாள அட்டையை பரிசோதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்