வடக்கில் இன்று 137 தொற்றாளர்கள்: யாழ்ப்பாணத்தில் 95 பேர்!

Date:

வடமாகாணத்தில் இன்று 137 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில், யாழ் மாவட்டத்தில் 95 பேர் தொற்றுடன் அடையாளம் காண்பட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைகழகம், யாழ் போதனா வைத்தியசாலை பரிசோதனை கூடங்களில் 937 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.

இதில், யாழ் மாவட்டத்தில் 95 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 31 பேரும், வவுனியா மாவட்டத்தில் 7 பேரும், முல்லைத்தீவில் 4 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 2 பேர், ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேர் (இதில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர், சிலர் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டவர்கள், ஏனையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்) தொற்றிற்குள்ளாகினர்.

வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், பொது வைத்தியசாலையில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதியில் 8 பேர்,  பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 பேர், கோப்பாய் வைத்தியசாலையில் 2 பேர், தெல்லிப்பழை 3 பேர்,  கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 பேர் (இதில் சுகாஸ் பேக்கரி தொடர்பில் 33 பேர், நெல்லியடி வர்த்தகர்கள் 3 பேர்) , தெல்லிப்பழை அந்தோனிபுர கிராமத்தில் சுயதனிமைப்படுத்த்பட்ட 17 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டன்.

 

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்