தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி காரியாலயமான அறிவகத்தில்
இன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான இன்று பல இடங்களில்அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயத்திலும்
இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் குருகுலராஜா, கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனக் கலந்து கொண்டனர்.
தகவலறிந்து காரியாலயத்திற்குள் திடீரென புகுந்த பொலிஸார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்படுவதாகவும் அங்கு மக்கள் கூடியிருப்பதாகவும் நினைத்து கொண்டு பொலிஸார் காரியலயத்தினை சுற்றிவளைத்திருந்தனர்.
பொலீசார் வருவதற்கு முன்பாகவே நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துவிட்டது. இருந்தபோதிலும் அவ்விடம் வந்த பொலீசார் நடைபெற்று முடிந்த நிகழ்வினை யும் காணொளி மூலமாக பதிவு செய்தனர்.
பொலீசார் காரியாலயத்திற்குள் நின்ற வேளை இராணுவம் வெளியே நின்றனர்
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




