முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) மாலை ஆறு மணிக்கு கிளிநொச்சியில் சமத்துவக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கட்சியின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ந.தமிழரசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடரினை கட்சியின் கரைச்சி பிரதேச சபை
உறுப்பினர் லோரன்ஸ் ஏற்றியதனை தொடர்ந்து ஏனையச் சுடர்களும் ஏற்றிவைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் போது கட்சியின் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 




