இந்தியா

கி.ரா.வுக்கு சிலை… புகைப்படங்கள், படைப்புகளை காட்சிப்படுத்த ஓர் அரங்கம் : தமிழக அரசு அறிவிப்பு!

மறைந்த எழுத்தாளர் ‘கரிசல் குயில்’ கி.ராவுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கி.ரா. அவர்களின்‌ புகழுக்குப்‌ பெருமை சேர்க்கும்‌ வகையில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களது அறிவிப்புகள்‌ தமிழ்‌ இலக்கியத்திற்குச்‌ செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர்‌ கி.ராஜநாராயணன்‌ (கி.ரா.) அவர்கள்‌ ஏட்டறிவைக்‌ காட்டிலும்‌ பட்டறிவால்‌ பல
இலக்கியப்‌ படைப்புகளைத்‌ தந்தவர்‌; வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப்‌ படைப்புகளுக்கு முன்னோடியாகத்‌ திகழ்ந்தவர்‌.

மறைந்த எழுத்தாளர்‌ கி.ரா. அவர்கள்‌ படித்த இடைசெவல்‌ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியை அரசு சார்பில்‌ பழமை மாறாமல்‌ புதுப்பிக்கவும்‌, அவரது நினைவினைப்‌ போற்றும்‌ வகையிலும்‌ அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும்‌ வகையிலும்‌ அவருடைய புகைப்படங்கள்‌ – படைப்புகள்‌ ஆகியவற்றை மாணவர்களும்‌ பொது மக்களும்‌ அறிந்துகொள்ளும்‌ வகையில்‌ ஒர்‌ அரங்கம்‌
நிறுவப்படும்‌.

கரிசல்‌ இலக்கியத்தை உலகறியச்‌ செய்த பிதாமகர்‌ கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில்‌ அரசு சார்பில்‌ சிலை அமைக்கப்படும்‌ எனவும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

யூடியூப் சேனல் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வருவாய் ஈட்டுகிறேன்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

Pagetamil

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

Pagetamil

கள்ள வாக்கிட்ட திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!