வடக்கில் ஒரு நாளில் மிக அதிக தொற்று:வடக்கில் 378 பேர்; முல்லைத்தீவில் 322 பேருக்கு தொற்று!

Date:

இன்று (17)  வடமாகாணத்தில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.வடக்கில் 378 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 322 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று வடக்கில் 976பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் பரிசோதிக்கப்பட்டன. இதில் 117 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இதில், முல்லைத்தீவில் 66 பேரும், யாழ்ப்பாணத்தில் 33 பேரும், கிளிநொச்சியில் 7 பேரும், வவுனியாவில் 6 பேரும், மன்னாரில் 5 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 61 பேர், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 3 பேர், முல்லைத்தீவு வைத்தியசாலையில் 2 பேர் என 66 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் 5 பேர், தர்மபுரம் வைத்தியசாலையில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா வைத்தியசாலையில் 5 பேர், செட்டிக்குளம் வைத்தியசாலையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் வைத்தியசாலையில் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேர், பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர், சாவகச்சேரி வைத்தியசாலையில் 3 பேர், சங்கானை, தெல்லிப்பழை வைத்தியசாலைகளில் தலா ஒவ்வொருவர் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர்,.சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், சண்டிலிப்பாய், உடுவில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா ஒவ்வொருவர் அடையாளம் காணப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 960 பேரிடம் நடத்தப்பட்ட துரித அன்டிஜன் சோதனையில் 261 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...

BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு

ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் BYD கார் விற்பனை நிலையத்தின்...

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு

காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்