திரிபடையும் கொரோனா: முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை; கொழும்பில் யுத்த நிறைவு நிகழ்விற்கு ஏற்பாடு!

Date:

கொழும்பில் யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்காக அமைக்கப்பட்ட தூபியில் நிகழ்வு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யுத்த வெற்றியை நினைவுகூர்வதுடன், கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்த பகுதியில் கலந்த சில வருடங்களான மே 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளிற்கு கொரோனாவை காரணம் காண்பித்து, பொலிசார் ஓடியோடி வடக்கில் தடையுத்தரவுகளை பெற்று வரும் நிலையில், கொழும்பில் யுத்த வெற்றி தினத்தில் இந்த நிகழ்வு இடம்பெற ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனேகமாக நாளை கொண்டாட்டம் இடம்பெறலாமென தெரிகிறது.

நாடாளுமன்றத்தின் எதிர்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யுத்தத்தில் கொல்லப்பட்ட இராணுவத்தினர் நினைவிடத்தில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இராணுவத்தினர் பலர் அங்கு இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

3 பெரிய கொட்டகைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறவிருந்த நிலையில், முல்லைத்தீவின் 3 பொலிஸ் பிரிவுகள் இன்றிரவு முதல் முடக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்