நுவரெலியா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

Date:

நுவரெலியா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவு பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

அட்டன் பகுதியில் ஒன்றும், நோர்வூட் பகுதியில் மூன்றும், பொகவந்தலாவ பகுதியில் ஐந்து ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி பொகவந்தலாவ பொலிஸ் பகுதியில் கெகர்ஸ்வோல்ட், பொகவான, லொய்னோன், கொட்டியாகல, பொகவந்தலாவ ஆகிய கிராம சேவகர் பகுதிகளும், நோர்வூட் பொலிஸ் பகுதியில் வெஞ்சர், இன்ஜஸ்ட்ரி, டிலரி ஆகிய கிராம சேவகர் பகுதிகளும், அட்டன் பொலிஸ் பகுதியில் என்பீல்ட் கிராம சேவகர் பகுதியும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்