சொந்தகார் வாங்குவதற்காக மூன்று மாத குழந்தையை விற்ற பெற்றோர்!

Date:

சொந்த கார் வாங்குவதற்காக தங்களுடைய மூன்று மாத குழந்தையை ஒன்றரை லட்சத்துக்கு விற்பனை செய்த பெற்றோர் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தையை அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தொழில் அதிபர் ஒருவர் கேட்டதை அடுத்து ஒன்றரை லட்சத்துக்கு குழந்தையின் பெற்றோர் விற்பனை செய்துள்ளனர்.

இந்த பணத்தை வைத்து அந்த தம்பதியினர் கார் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து குழந்தையின் தாத்தா அளித்துள்ள புகாரின் அடிப்படையில் குழந்தையை விற்பனை செய்த பெற்றோரிடம் போலீசார் விசாரணை செய்தபோது கார் வாங்குவதற்காக குழந்தையை விற்றது உறுதி செய்யப்பட்டது

இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் தொழிலதிபரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சொந்த கார் வாங்குவதற்காக சொந்த குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் குறித்த தகவல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்