நாட்டில் இன்று (16) இதுவரையான காலப்பகுதியில் 1,732 பேர் COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 142,203 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 1,102 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதன்படி, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118,322 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 22,940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 1,419 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.




