குற்றம்

பயணக்கட்டுப்பாட்டிலும் அடங்க மறுக்கும் யாழ் ரௌடிகள்: கூட்டமாக வந்து கொலைவெறி!

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் , மோட்டார் சைக்கிள் , துவிச்சக்கர வண்டி, வீரரின் இருந்த பொருட்கள் என்பவற்றையும் அடித்து உடைத்து அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள நிலையில் நேற்று (15) சனிக்கிழமை மாலை 6 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் , வீட்டிலிருந்த இளைஞன் ஒருவரின் தங்க சங்கிலி ஒன்றையும் தாக்குதலாளிகள் கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் , தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளடங்கிய குழு மோட்டார் சைக்கிள்களில் வந்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.

இதேவேளை குறித்த கும்பல் மது போதையில் அப்பிரதேசத்தில் நீண்ட நேரமாக நின்று அட்டகாசம் புரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
1

Related posts

யாழில் கொடூரம்: நடுவீதியில் மனைவியை விரட்டி விரட்டி வெட்டிய கணவன்!

Pagetamil

பூசகர் வீட்டுக்கு பெற்றோல் குண்டுவீச்சு!

Pagetamil

சுவிசிலிருந்து 3 இலட்சம் ரூபா அனுப்பி வீட்டின் மீது தாக்குதல் நடத்துவித்த பெண்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!