மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன், மாவட்டத்தில் இன்று 3 கொரோனா மரணங்களும் பதிவானது.
ஓட்டமாவடி பகுதியில் 15 பேரும், ஆரையம்பதி பகுதியில் 2 பேரும்,
செங்கலடி பகுதியில் ஒருவரும், காத்தான்குடி பகுதியில் 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வந்த காத்தான்குடியைச் சேர்ந்த 54 வயதுடையவரும், கிண்ணியா பகுதியை சேர்ந்த 45 வயதுடையவரும் உயிரிழந்தனர்.
மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் இன்று பகல் 12 மணிளவில் 85 வயதான முதியவர் தனது வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1