நாட்டில் நேற்று 2,289 பேர் COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 138,085 ஆக உயர்ந்தது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,269 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் அடையாளம் காணப்பட்டனர். வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 20 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று 1,306 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 110,108 ஆக உயர்ந்தது.
தற்போது 27,054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 1,312 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.




