31.3 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

இராணுவம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழித்தாலும் நினைவு கூருவோம்: மாவை!

அரசின் இராணுவம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழித்தாலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்தே தீருவோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணை தலைவரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா.

யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தேசத்தினதும் மக்களினதும் விடுதலைக்காக, தங்களைத் தாங்களே ஆளுவதற்காக இறைமை கொண்ட மக்கள் கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

கடந்த ஏழுதசாப்த காலங்களில் இப்போராட்டங்களினாலும், இனக்கலவரங்களினாலும், இறுதிப் போர்க்காலத்திலும் பல இலட்சம் மக்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளனர். அழிக்கப்பட்டுள்ளனர்.

இக்காலகட்டங்களில் அரசுகளின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் தமிழ் மக்கள் ஆள்புலப் பரப்பிலும் பௌத்தமயமாக்கல், சிங்கள மயமாதல்களினாலும் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் பெருவீழ்ச்சியடைந்து வருகின்றது. தமிழ் மக்கள் மொழி, பண்பாடு, நாகரிகம் என்பனவும், தமிழர் தேசத்தினதும், மக்களினதும் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறானதொரு நிலையில் தங்கள் உயிர்களைப் பறிகொடுத்த மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரவும், அஞ்சலி செய்யவும், ஆத்மசாந்திக்கான ஈமக்கடன்களில் ஈடுபடவும் உள்ள உரிமை பண்பாடு நாகரிகம் இங்கையில் மறுக்கப்பட்டுள்ளது.

அம்மக்கள் அஞ்சலி செய்ய, கண்ணீர்விட்டழுது ஆறுதல் பெற, ஆன்மக்கடனியற்றவுள்ள நினைவிடங்களும், சின்னங்களும் அழிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் ஆன்மத்தையே அழிக்கும் செயல்பாடுகளே சென்ற 12.05.2021 நள்ளிரவில் இராணுவம் சூழ்ந்திருக்க முள்ளிவாய்க்கால் நினைவிடத்திலும் நடந்தேறியிருக்கிறது.

அந்த நினைவிடத்தில் “மே” 18ஆம் நாள் அந்நினைவுக்கல் நிலைநிறுத்தவும், அந்நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சிகள் இடம்பெறவும் ஒழுங்கமைப்புக்கள் இடம்பெற்றன. அந்த நினைவுக்கல்லும் அங்கிருந்து இராணுவம் சூழ்ந்திருக்க அகற்றப்பட்டிருக்கிறது. அந்நினைவுக்கல் இப்பொழுது எங்கே? இலங்கை அரசு இத்தனைக்கும் பொறுப்புக் கூறியேயாக வேண்டும்.

இலங்கை அரசு பொறுப்புக் கூறுதல் இற்றைவரை இதற்கு மட்டுமல்ல 2009 “மே” திங்கள் வரையிலான போர் இறுதிவரையிலான போர்;க்குற்றங்கள் மற்றும் இனப்பிரச்சனைக்கான தீர்வு வரை 23.05.2009 வருகை தந்த ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான்-கீ-மூனுடன் செய்து கொண்ட உடன்பாடு வரைக்கும் பொறுப்புக் கூற இராஜபக்ச அரசுக்குப் பொறுப்புண்டு.

2021 46ஃ1 ஐ.நா மனித உரிமைப் பேரவைத்தீர்மானம் வரை இத்தீர்மானம் இலட்சோப இலட்சம் தமிழ்த் தேச மக்கள் உயிர்கள் பறித்;தழித்த வரை, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரனைக்கான மேலும் தேவைப்படும் ஆவணங்கள் ஆதாரங்களைத் திரட்டும் அதிகாரம் ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர் பட்ஜ்லெட் அம்மையாரிடம் கையளிக்கப்பட்டுள்ளவரை 2021 மே 12 நள்ளிரவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் சிதைக்கப்பட்ட வரை இலங்கை அரசுகளினால் இன்றைய அரசு வரை தமிழர் தேசமும் மக்களும் அழிக்கப்பட்ட வரலாறுகளையெல்லாம் தாங்கி முள்ளிவாய்க்கால் பிரதிபலித்து நிற்கின்றது. அதனையும் அழிக்க இன்றைய அரசு இராணுவ ஆளுகைக்கூடாகச் செயல்பட்டு நிற்கின்றது. இத்தகைய வரலாற்றைப் பிரதிபலிக்கும் முள்ளிவாய்க்கால் அத்திபாரத்திலிருந்துதான் தமிழ்த் தேசமக்களின் எழுச்சி எதிர்கால சந்ததியின் விடுதலை வரலாற்றைப் படைக்கப் போகின்றது. அந்த வரலாற்றுத் தீர்மானத்தை “மே” 18 அன்று நாமனைவரும் ஒன்றுபட்டு நிறைவேற்றுவோம். இலங்கைத் தமிழினம் பிரச்சனை இன்று சர்வதேசமயப்பட்டிருப்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டிக் கிருத்துவ ஆயர்கள் கொரோனா வைரஸ் தீவிரத்தையும் கடந்;து அர்த்தமுள்ள ஆனால் காத்திரமான அறிக்கையின் மூலம் தமிழ்த் தேசமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை எழுச்சி கொள்ள வைக்கிறது.

கொரோனா வைரஸ் பல திரிபுகளாய் தீவிரமாய் உயிர்களைப் பலி கொள்கிறது. எமது பிரதேசங்களிலும் பல இலட்சம் மக்களைப் இனப் போரில் பலிகொடுத்துவிட்ட நிலையிலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உயிர்களைக் காக்க மருத்துவ நிபுணர், உலக சுகாதார நிறுவனத்தின் கட்டுபாடுகளை ஏற்று நாமே நம்மைப் பாதுகாக்கும் வழிவகைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளோம்.
எனவே மே-18 அன்று இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து வாழும் இடங்களிலும் குடியிருக்கும் குடில்களிலுங் கூட நினைவு கூர்ந்து மாலை 6.00 மணிக்கு மணி ஒலியெழுப்பிச் சுடரேற்றி விளக்கேற்றி திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்;க்கால் நினைவலைகளை பாரெல்லாம் பரப்பி நிற்போம் என அழைப்பு விடுக்கின்றோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment