யாழ் மாவட்ட செயலக ஊழியர்கள், வவுனியா பல்கலை மாணவர்கள், பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்; வடக்கில் 61 பேருக்கு தொற்று!

Date:

இன்று வட மாகாணத்தில் 61பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் 858 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

இன்றைய பரிசோதனையில்  யாழ் மாவட்டத்தில் 36 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேர்,  கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேர், வவுனியா மாவட்டத்தில்11 பேர், மன்னார் மாவட்டத்தில் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 3 பேர், மல்லாவி வைத்தியசாலையில் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் தொற்றிற்குள்ளாகினர். இவர்கள் பூநகரி பிரதேச செயலக உத்தியொகத்தர்கள்.

கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், தர்மபுரம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர் (வவுனியா பல்கலைகழகம்), வவுனியா வைத்தியசாலையில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காண்பட்டனர்.

யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட 13 பேர் (ஒருவர் வைத்தியசாலை ஊழியர், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இருவர்), பருத்தித்துறை வைத்தியசாலையில் 3 பேர், சாவகச்சேரி வைத்தியசாலை 2, நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலை 1.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  5 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்