கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 30 பேர் கைது!

Date:

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வௌிநாடு செல்லும் எதிர்ப்பார்ப்புடன் சிலாபத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து நேற்று (13) மற்றும் இன்றைய தினங்களில் (14) சிலாபம், சமிந்துகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இந்த வீடு சுற்றிவளைக்கப்பட்ட போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். எஞ்சியவர்கள் வீட்டிலிருந்து தப்பிச் சென்றனர். கிராமவாசிகளின் உதவியுடன் இன்று காலை நடத்தப்பட்ட தேடுதலில் ஏனையவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்பாடு செய்து கொடுத்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த நபர்கள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்