முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை விடுதலை புலிகளை நினைவுகூரும் விதமாகவோ, கொரொனா விதிமுறைகளை மீறும் விதமாகவோ நடத்த முடியாதென முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்க கோரி, மாங்குளம், முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மல்லாவி, முள்ளியவளை பொலிஸ் நிலையங்கள் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளை நினைவுகூர்வதால் இனமுரண்பாட்டை ஏற்படுத்தும், நினைவு நிகழ்வால் கொரோனா அபாயம் ஏற்படும் என பொலிசார் தடை விண்ணப்பம் கோரியிருந்தனர்.
ஒவ்வொரு பொலிஸ் நிலையம் சார்பிலும் சிலரது பெயர்கள் குறிப்பிட்டு, அவர்களை நிகழ்வை ஏற்பாடு செய்வதை தடைவிதிக்குமாறு கோரப்பட்டது.
எனினும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை விடுதலை புலிகளை நினைவுகூரும் விதமாகவோ, கொரொனா விதிமுறைகளை மீறும் விதமாகவோ நடத்த முடியாதென முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் அன்ரன் புனிதநாயகம் தலைமையில் ந.காண்டீபன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
இன்றைய வழக்கு விபரம் தொடர்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தமிழ்பக்கத்திடம் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு-




