முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு, நினைவுக்கல் திருட்டை கண்டித்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
முழு நாடும் முகம் கொடுத்து நிற்கும் பாரிய தொற்று நோய் நெருக்கடி நிலைமையிலும், போரில் உயிரிழந்த தமிழ் மக்களின் பெயரால் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் சிதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.
சமுகப்பொறுப்பையும் மனிதப்பண்பாட்டையும் மதிக்கும் அனைவரும் இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை கண்டிக்க முன்வர வேண்டும்.
தமிழ் மக்களின் உணர்வுகளை கொடூரமாக காயப்படுத்தியிருக்கும் இச்சம்பவம் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகின்றது என்பது பகிரங்கமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்று நாம் கோருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.




