25.7 C
Jaffna
January 2, 2025
Pagetamil
சினிமா

ஆணுறை பரிசோதிக்கும் சர்ச்சைக்குறிய கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. ஆனால் தற்போது ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் புதிய பாலிவுட் படத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே எல்லா நடிகைகளும் ஏற்க தயங்கும் கதாபாத்திரத்தை ஏற்க உள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

அந்த படத்தில் புதிய ஆணுறையின் செயல் திறனை சோதித்து அது பற்றி அதன் நிறுவனத்திற்கு சொல்ல வேண்டும். இப்படியொரு வித்தியாசமான, சர்ச்சைக்குறிய கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

Leave a Comment