இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக வந்து குருநகரில் தங்கியிருந்த 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Date:

தமிழகத்தில் இருந்து படகு மூலம் இரகசியமாக யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்த 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அகதி முகாமில் தங்கியிருந்த 4 பேர், கொரோனா அச்சத்தால் சட்டவிரோதமாக படகு மூலம் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர்.

அவர்கள் குருநகரிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில், இன்றுயாழ்ப்பாணம் பொலிசாரால் கண்டறியப்பட்டனர்.

55 வயதான தாய், 35 வயதான மகள், அவரது 4, 9 வயதான ஆண் பிள்ளைகளே இவ்வாறு குருநகர் வீட்டிலிருந்து அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் நேற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சென்று பிசிஆர் சோதனைக்கு சென்றுள்ளனர். மன்னாரில் இருந்து குருநகருக்கு குடிவந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும், அதை உறுதி செய்யும் ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் நேற்று பிசிஆர் சோதனை செய்யப்படவில்லை.

இந்த நிலையில், அவர்கள் இந்தியாவிலிருந்து வந்ததை அறிந்த பொலிசார், இன்று மாலை அவர்களை வீட்டுடன் தனிமைப்படுத்தியுள்ளனர்.

சில தினங்களின் முன்னர் மானிப்பாய் பகுதியை சேர்ந்த ஒருவர் கடல் மார்க்கமாக நுழைந்த ஒருவர் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்