மொரட்டுவ பகுதியில் ஒருவர் திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
புதிய காலி வீதி, நடைபாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர், இன்று காலை திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் அடையாளம் காணப்படவில்லை. அவரது உடல் பாணந்துறை வைத்தியசாலை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பதை அறிய பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.




