கிளிநொச்சி பாடசாலைக்குள் புகுந்தது கொரோனா: 6 மாணவர்களிற்கு தொற்று!

Date:

கிளிநொச்சியில் இன்று திங்கள் கிழமை வெளியிடப்பட்ட பிசிஆர் முடிவுகளின்
படி கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் ஆறு
மாணவர்களும், கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் 14 பேருக்கும் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் 22
பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்
தொற்றுக்குள்ளான பொலிஸாருடன் நெருக்கமான தொடர்பிலிருந்த பொலிஸார்
தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்
பரிசோதனை போதே புதிதாக 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிளிநொச்சியில் 36 பொலீஸாருக்கு தொற்று
ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில்
தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்த குறித்த வகுப்பில் உள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த
நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டட பிசிஆர் முடிவுகளும் இன்று
வெளிவந்த நிலையில் அதில் ஆறு மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி
செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்