பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது பற்றி புதன்கிழமை கலந்துரையாடல்!

Date:

பாடசாலைகளை மீண்டும் திறக்கப்படுவது தொடர்பாக புதன்கிழமை கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று அனுராதபுரத்தில் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை வாரந்தோறும் மதிப்பிடப்படுகிறது. பாடசாலைகள், முன் பள்ளிகள், அறநெறி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி வகுப்புகள் மீண்டும் தொடங்குவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இந்த நிறுவனங்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து ஒரு திட்டவட்டமான காலத்தைக் குறிப்பிட முடியாது என்று அமைச்சர் கூறினார்.

கொரோனா வைரஸ் நிலைமை சீரடையும் போது பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மருத்துவ மற்றும் கல்வித் துறை சார்ந்தவர்கள் புதன்கிழமை கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நேரம், முயற்சி மற்றும் நிதி தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு செலவிடப்படுவதாகக் கூறினார்.

 

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்