மன்னாரில் மகளிர் இல்லத்தில் மின்னல் தாக்கம்!

Date:

மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை இல்லத்தின் மீது நேற்று (7) வெள்ளிக்கிழமை மாலை இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது குறித்த இல்லத்தின் மின் இணைப்புக்கள் முழுமையாக இடி மின்னல் தாக்கத்தினால் எரிந்து சேதமாகி உள்ளன.

இதன் போது குறித்த இல்லத்தில் சிறுமிகள், பாடசாலை மாணவிகள் என 15 பேர் இருந்துள்ளனர்.

எனினும் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடர்ச்சியாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வந்தது.இந்த நிலையிலே குறித்த இல்லத்தின் மீது குறித்த அனார்த்தம் ஏற்பட்டது.

உடனடியாக குறித்த இல்லத்தில் உள்ள சிறுமிகள், பாடசாலை மாணவிகள் வெளியேற்றப்பட்டு அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மின்சார சபைக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்,விரைந்து வந்த மின்சார சபையினர் மின்சார இணைப்பை துண்டித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்