மட்டக்களப்பில் அதிவேகத்தால் நேர்ந்த விபத்து: வாகனத்தில் பயணித்த ஆணும், பெண்ணும் பலி!

Date:

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த போதே விபத்து நேர்ந்தது. நேற்றிரவு 10.50 மணியளவில் விபத்து நடந்தது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியை சேர்ந்த பரமேஸ்வரன் தனுஜன் (31), மாவடி வேம்பை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் வினோகா (31) ஆகியோரே உயிரிழந்தனர்.

சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் வினோகா வாகனத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. வாகனம் அதிவேகமாக பயணித்து விபத்து நேர்ந்தது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

இருவரும் ஆசனப்பட்டியை அணியவில்லையென்றும், விபத்தையடுத்து வாகன கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு இருவரும் வெளியே வீசப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்