மன்னாரில் 100 பேருக்கு சிகிச்சையளிக்கும் நிலையம் அமைக்கப்பட்டது!

Date:

மன்னார் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நூறு கோவிட் நோயாளர்களை அனுமதித்து சிகிச்சை வழங்க விசேட சிகிச்சை நிலையத்தை இராணுவத்தினர் தயார் செய்து வருகின்றனர்.

மன்னார் தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி சிட்டி பாடசாலையினை மாவட்ட அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுள்ள நிலையில்,இராணுவத்தின் உதவியுடன் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சிகிச்சை நிலையத்தில் ஒரே நேரத்தில் நூறு கொவிட் தொற்று நோயளர்களை அனுமதித்து சிகிச்சை வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகின்றது.

குறித்த சிகிச்சை நிலையத்தில் மன்னார் சுகாதார துறையினர் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (7) மதியம் குறித்த சிகிச்சை நிலையத்தின் பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்