ஒரு குழு செய்த கொலைக்காக ஒருவருக்கு தண்டனையளிக்க முடியாது என்பதாலேயே மிருசுவில் கொலையாளி சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர சரத் வீரசேகர தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
இதன்போது, சரத் வீரசேகரவிற்கும், சரத் பொன்சேகாவிற்குமிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சரத் வீரசேகரவை பைத்தியம் என சரத் பொன்சேகா திட்டினார்.
சரத் வீரசேகர உரையாற்றிய போது,
உயிர்த்த ஞர்யிறு தாக்குதல் தொடர்பில் உளவுத் தகவல்கள் கிடைத்தும் அது தொடர்பில் செயற்படாதலர்கள்தான் இன்று பெரிதாக பேசுகிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்னர் 10 சம்பவங்கள் நடந்தன. பாதுகாப்பு அமைச்சை போல ஏனைய துறையினரும் ஒன்றுமே செய்யவில்லை. சஹ்ரானை கைது செய்யுமாறு எழுது்துமூலம் அறிவித்தலும் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தாக்குதலின் பின்னரே செயற்பட்டனர்.
இந்த விசாரணைகளை முடக்கவே எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. பிரதான சந்தேகநபரை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு இவர்கள் கோருவது விசாரணைகளை முடக்கவே. ரிசாஷத் இங்கு வந்து உலகம் முழுவதும் தொலைபேசியில் பேசுவார். விசாரணை விடயங்களை வெளிப்படுத்துவார். இதனால் விசாரணை முடங்கி விடும். இதனால்தான் எதிர்க்கட்சி இந்த கோரிக்கை வைக்கப்படுகிறது.
யுத்தத்தின் போது அர்ப்பணிப்பாக செயற்பட்ட முப்படையினரையும் காட்டிக் கொடுக்கும் கூற்றுக்கள் இங்கு வைக்கப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்லியிருந்தால் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் இராணுவத்தில் இருந்த ஒருவர் அதை செய்யும் போது பிரச்சனையுள்ளது. சரத் பொன்சேகா சில தினங்களின் முன்னர் தனது இனத்தையும், இரைாணுவததையும் காட்டிக்கொடுக்கும் ஒரு கூற்றை சில தினங்களின் முன் சொல்லியிருந்தார்.
சுனில் ரத்னாநயக்கவிற்கு மன்னிப்பளித்தது பிழை, அவர் சிறையிலடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட சரத் பொன்சேகா, சீருடையணிந்தால் அவர் கொலை செய்ய முடியாது. அது சீருடைக்கு அவமானத்தை ஏற்படுத்துவது. அவர் தூக்கிலிடப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்த சரத் வீரசேகர, ஜெனீவா சமயத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வசதியாக, மேற்கு நாடுகளிற்கு வசதியாக, எந்த தூண்டுதலுமின்றி பொன்சேகா பேசியது, புலம்பெயர்ந்தவர்களின் டொலர்களிற்காகவே.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஒன்றரை கோடிக்கு மேலும், பின்னர் 50 இலட்சம் டொலர்களும் பொன்சேகாவின் கணக்கில் சம்பத் வங்கிக் கணக்கில் இருந்தது.
நீங்கள் மட்டும் யுத்தம் செய்யவில்லை. யுத்தத்தை முடித்து மக்களின் மரியாதையை பெற்ற ஐவரில் நானும் ஒருவன். அதை தெரிந்து கொண்டு பேசுங்கள்.
இவரது முதலாவது காட்டிக்கொடுப்பு, வெள்ளைக்கொடி விவகாரம். சரணடைந்தவர்களை கொன்றதாக அமெரிக்காவில் தெரிவித்தார்.
மிருசுவில் கொலை வழக்கில் மகேஸ்வரன் என்பவர் தனது கண்ணை கட்டி இராணுவத்தினர் வேலிக்கு அப்பால் தூக்கிப் போட்டதாகவும், அப்போது வேலியில் கண்ணை கட்டிய துணி சிக்கி அவிழ்ந்ததால் கண்ணால் கண்டதை கூறியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் சொன்னதை காதால் கேட்டு விட்டு, தான் கண்டதை போல பொன்சேகா தெரிவித்தார்.
தனது இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் இப்படியானவர் லான்ஸ் கோப்ரலாக இருக்கவும் தகுதியற்றவர்.
பொன்சேகா குறுகிட்டு- நான் சொன்னது உயர்நீதிமன்ற வழக்கில் இருப்பதை. தீர்ப்பில் சொல்லப்பட்டதை என்றார்.
வீரசேகர- சரி அதை நீங்கள் ஏன் சொல்ல வேண்டும். புலம்பெயர்ந்தவர்களின் டொலர்களிற்கு ஆசைப்பட்டே.
ஒரு குழு செய்ய கொலைக்கு ஒருவருக்கு மாத்திரம் தண்டனை கொடுப்பது பிழையென சட்டத்தரணிகள் குழு சுட்டிக்காட்டியது. இதனால்தான் அவர் வழக்கிலிருந்து விடுபட்டார்.
6வது கஜபா பிரிவில் செயற்பட்ட சுனில் ரத்னாநாயக்க பயங்கரவாதிகளின் பிரதேசத்தில் போரிட்டார். மகாசோன் பிரிவென்றால் புலிகள் கூட நடுங்குவார்கள். ரத்னாயக்க இப்பொழுது மண்வீட்டில் இருக்கிறார்.
யுத்தத்தின் பின்னர் 12,000 புலிகள் விடுவிக்கப்பட்ட போது, 5,000 சிறுவர் போராளிகள் விடுவிக்கப்பட்ட போது, தெஹிவளை குண்டுவெடிப்பாளரின் தலையில் தடவியபோது நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்களா? இல்லை. இப்பொழுது எமது இராணுவ வீரர்கள் விடுவிக்கப்படும் போது எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சரத் வீரசேகர நிலையியற் கட்டளைகளை மீறி உரையாற்றுவதை சுட்டிக்காட்டி, சரத் பொன்சேகாவிற்கு எதிரான கருத்துக்களை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க கோரினார். அத்துடன், டொலர்களை பெற்றதால்தான் பொன்சேகா தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேரிட்டது என்றார.
நிலையியற் கட்டளைகளின்படி அதை செயற்படுத்துவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
விவாதத்தின் இடையில் வீரசேகரவை பைத்தியம் என பொன்சேகா விமர்சித்தார்.




