மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக ஊழியர்கள் பன்னிரெண்டு பேருக்கு கொரணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை அடுத்து பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தும் நேற்று முதல் 05.05.2021 சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்கள் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பிரதேச செயலகத்தில் ஒரு பிரிவில் கடமையாற்றும் சில ஊழியர்கள் காய்ச்சல் காரணமாக விடுமுறையில் இருந்தனர். அவர்கள் தாமாகவே சென்று பீ சீ ஆர் பரிசேதனையை மேற்கொண்டனர். அவர்களுக்கு தெற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அப்பிரிவில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பீ சீ ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை இதனையடுத்து அவர்கள் அனைவரும் சுயதனிப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சுகாதார நிலையை கருத்திற் கொண்டு அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. முதற்கட்டமாக 60 ஊழியர்களுக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதி ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும். அதன் முடிவினையடுத்து சுகாதார துறையினரின் ஆலோசனையைப் பெற்று பிரதேச செயலக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.




