29.5 C
Jaffna
March 28, 2024
கிழக்கு

வாகரை, பால்சேனை அதி கஸ்ட பிரதேச மாணவியின் சிறந்த பெறுபேறு

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகரை பால்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைத்துறையில் மாவட்ட நிலையில் மூன்றாம் நிலையை பெற்று மாணவி பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் மு.நவரெட்ணராசா தெரிவித்தார்.

வாகரை வம்மிவட்டவானைச் சேர்ந்த விஜயகுமார் றஞ்சினி தம்பதிகளின் மகளான தர்சிக்கா அதிகஸ்டப் பிரதேசத்தில் மாவட்ட நிலை மூன்றாவதைப் பெற்று பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆழி பேரலையாலும், கொடிய போராலும் பல வருட வடுக்களைத் தாங்கிய நிலையில் அவ்வடுக்கள் சிறிது மறைந்து கல்வியில் அதிக முன்னேற்றத்தை கண்டு வரும் பாடசாலையாக பால்சேனை தமிழ் மகாவித்தியாலயம் மிளிர்வது மகிழ்வளிக்கிறது.

உயர்தர கலை பிரிவில் வாகரை பால்சேனை தமிழ் மகா வித்தியாலய மாணவி இவ்வருடம் வாகரைப் பிரதேசத்தில் முதன்மைப் பெறுபேறு பெற்ற பெருமையைப் பெறுகிறது. 2ஏ, ஒரு சி பெற்று மாவட்ட நிலையில் 3ஆம் நிலையையும் பெற்றுள்ளது.

எவ்வித பிரத்தியேக வகுப்பு வசதிகளுமற்ற நிலையில் அப்பாடசாலை ஆசிரியர்களை மட்டும் நம்பிய நிலையில் அமைந்த அதிகஸ்டப்பிரதேச பாடசாலை பெறுபேறு என்பது அப்பிரதேசத்திற்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது. அப்பாடசாலை மாணவர்களது சிறப்பு மற்றும் சிறப்பில்லாத பெறுபேறுகளுக்கும் அவர்கள் மட்டுமே உரிமை கொள்ளும் பெருமிதத்தில் வாகரை பெருமை கொள்கிறது.

இதேபோன்று 2015ம் ஆண்டிலும் குணராசா யோதீஸ் எனும் மாணவன் மாவட்ட நிலையில் மூன்றாவதைப் பெற்றதுடன், 2019ம் ஆண்டிலும் கல்குடா கல்வி வலயத்தின் முதன்மைப் பெறுபேற்றையும் மாவட்டத்தின் 13 ஆம் நிலையையும் பெற்று வாகரைப் பிரதேசத்திலிருந்து முதலாவது சட்டத்துறை பிரவேசத்தை டியச்சந்திரன் நனிஸ்கா ஊடாக ஆரம்பித்து வைத்த பாடசாலையாகவும் தற்போது வாகரையின் இரண்டாவது சட்டத்துறை மாணவியை உருவாக்கிய பாடசாலையாகவும் பால்சேனை பாடசாலை திகழ்வதாக பாடசாலை அதிபர் மு.நவரெட்ணராசா தெரிவித்தார்.

எனவே பாடசாலைக்க பெருமை சேர்த்த மாணவி, அவரது பெற்றோர்கள், கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment