டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம்!-ஆந்திராவில் சோகம்

Date:

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகேயுள்ள கோரகண்டுகுரு கிராமத்தில் தர்பூசணி பழங்கள் அறுவடை செய்வதற்காக கூலித் தொழிலாளர்கள் டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகில் இருந்த மீன் குட்டையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட 5 கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த நெல்லூர் ரூரல் எம்எல்ஏ ஸ்ரீதர் ரெட்டி, சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
உயிரிழந்தவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டு நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

spot_imgspot_img

More like this
Related

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்