பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைப்பதைத் தடை செய்யுமாறு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டால் விசாரணைகளிற்கு பாதிப்பு ஏற்படுமென தெரிவித்தார்.
எனினும், இந்த கோரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.




