நாட்டில் மேலும் 11 கொரோனா மரணங்கள் நேற்று (4) பதிவாகியுள்ளன.
இதன்படி, மரணங்களின் எண்ணிக்கை 720ஆக உயர்ந்துள்ளது.
கொங்கஹவெலவைச் சேர்ந்த 33 வயது பெண், தியதலாவவைச் சேர்ந்த 84 வயது நபர்,
மாலபேவைச் சேர்ந்த 94 வயது பெண், மஹரகமவைச் சேர்ந்த 62 வயது நபர், அரணாயக்கவை சேர்ந்த 68 வயதானவர்,வல்கமுல்ல பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண்,
வெயங்கொடவைச் சேர்ந்த 69 வயது பெண், தபோத பகுதியைச் சேர்ந்த 49 வயது பெண்,
மொரட்டுவவைச் சேர்ந்த 82 வயது நபர், குருநாகலை சேர்ந்த 64 வயதுடையவரும், வஸ்கடுவவைச் சேர்ந்த 73 வயது பெண்ணும் மரணத்துள்ளனர்.




