29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

‘ஏதோ ஒன்று இருந்தது’: விபத்தை விளக்குகிறார் சுமந்திரன்!

இரு வாகனங்கள் சறுக்கிய காரணத்தினால் அந்த இடத்தில் ஏதாவது இருந்திருக்கின்றது என்பதை சந்தேகிக்க தோன்றுகின்றது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிகாலை நேரத்தில் வாகனத்தை நிறுத்தி பணம் கட்டிவிட்டு வெளியேறுகின்ற போது அச்சம்பவம் நடைபெற்றது. அந்த வேளை வேகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. ஈரமாக இருந்த வீதியில் உள்ள திருப்பம் ஒன்றில் வாகனம் சென்று கொண்டிருந்த நிலையில் சறுக்கி வீதியின் இரு பக்கமும் உள்ள பாதுகாப்பு கவசங்களை மாறி மாறி மோதி வாகனம் சுழல தொடங்கியது. அவ்வாகனம் அங்கு சறுக்குவதற்கு எண்ணெய் அல்லது வேறு ஏதாவது இருந்ததா என்பது எமக்கு தெரியவில்லை.

ஏதாவது இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் எனது வாகனம் அவ்விடத்தில் மோதி சுழன்று அடித்த பின்னரும் எமது வாகனத்திற்கு பின்னால் வந்த மற்றுமொரு வாகனமும் கூட அதே போன்று மோதி மிக மோசமாக சேதமடைந்திருந்தது.

இவ்விபத்தில் தெய்வாதீனமாக எமது வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் இடம்பெறவில்லை. ஆனால் விபத்திற்குள்ளாகிய இரு வாகனங்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. ஒரு இடத்தில் சிறிய இடவேளையில் இரு வாகனங்கள் சறுக்கிய காரணத்தினால் அந்த இடத்தில் ஏதாவது இருந்திருக்கின்றது என்பதை சந்தேகிக்க தோன்றுகின்றது என்றார்.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment