கட்டுக்கடங்காத கொரோனா மரணங்கள்: மயானத்தில் ‘ஹவுஸ் புல்’ அறிவிப்பு!

Date:

இந்தியாவில் கொரோனா மரணங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து செல்லும் நிலையில், இடுகாடு ஒன்றில் ‘ஹவுஸ் புல்’ அறிவிப்பு மாட்டப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகாவின் சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஒரு தகன மைதானத்தில் ஒரே நேரத்தில் 20 கொரோனா நோயாளிகளின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்படுவதால் அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து எடுத்து செல்லப்படும் உடல்கள் இந்த மயானத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.

ஏற்கனவே 20 உடல்கள் எரிமேடையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில உடல்கள் மையானதுக்கு வெளியே நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மையானதுக்கு வெளியே ‘ஹவுஸ் ஃபுல்’ பலகையை மாட்டியுள்ளனர்.

பெங்களூருவில் மொத்தம் 13 மின் தகன மேடைகள் உள்ளன. அவைகள் முழுவதும் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புகளால் பரபரப்பாக இயங்குகின்றன. இந்நிலையில், தகனத்தின் சுமையை குறைக்க பெங்களூரைச் சுற்றியுள்ள 230 ஏக்கர்களை கர்நாடக அரசு ”புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே” (பிபிஎம்பி) க்கு ஒதுக்கியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்