மது அருந்தவதற்காக பணம் சேகரிக்க விபரீத செயலில் ஈடுபட்ட யாழ் இளைஞன் கைது!

Date:

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதிக்கு அண்மையில் நேற்று (2) ஞாயிற்றுக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புத்தர் சிலை இருந்த அறையை உடைத்த இளைஞன் அப்பகுதியில் காணப்பட்ட பழைய இரும்புகளையும் சேகரித்துள்ளார்.

எனினும், புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிந்த கொண்ட காங்கேசன்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து சிலையை உடைத்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

மதுபோதைக்கு அடிமையான இளைஞன், மது அருந்துவதற்காக இரும்புகளை சேகரித்த போதே இந்த சம்பவம் நடந்தது விசாரணையில் தெரிய வந்தது.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்